vikram

சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் 'சாமி ஸ்கொயர்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இப்படத்தை ஹரி இயக்கியுள்ளார். 'சாமி' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் படத்தின் ட்ரைலரை நேற்று காலை 11 மணி அளவில் வெளியிடுவதாக படக்குழு முன்னர் அறிவித்திருந்தது.

Advertisment

அதன்படி படத்தின் பரபரப்பான ட்ரைலர் நேற்று காலை வெளியாகி ரசிகர்களிடையே கலவையான உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.கடந்த 2003ல் எடுக்கப்பட்ட சாமி படத்தில் 'நான்போலீஸ் இல்ல பொறுக்கி', போன்ற பன்ச் வசனங்கள் இருந்ததைப் போல இந்தப் படத்தில் அதற்கு அடுத்த லெவலில்அதிரடியாகக் களமிறங்கிநடிகர் விக்ரம்'நான் தாய் வயித்துல பொறக்கல... பேய் வயித்துல பொறந்தேன்' என்றும்'நான் சாமி இல்ல... பூதம்'என்றும்ட்ரைலரில்பன்ச் வசனங்களைப்பேசி ரசிகர்களை தெறிக்கவிட்டுள்ளார்விக்ரம். பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் 'பன்ச்'க்கும் பறக்கும் கார்களுக்கும் பேர் பெற்ற இயக்குனர்ஹரி படங்களின் ரசிகர்களுக்கு பெரிய விருந்து காத்திருக்கிறது போல.

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/ycPfmwVZ5DM.jpg?itok=u1CcUloG","video_url":" Video (Responsive, autoplaying)."]}