Advertisment

இயக்குநர் விக்ரமனின் மனைவிக்கு தவறான சிகிச்சை - வீட்டிற்கு விரைந்த அமைச்சர்

vikraman wife treatment issue minister subramaniyan went director vikraman house

தமிழில் பூவே உனக்காக, சூரியவம்சம், வானத்தைப்போல உள்ளிட்ட பல ஹிட் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் விக்ரமன். கடைசியாக 2014 ஆம் ஆண்டு வெளியான 'நினைத்தது யாரோ' படத்தை இயக்கியிருந்தார். அதன் பிறகு எந்தப்படமும் இயக்கவில்லை.

Advertisment

இதனிடையே விக்ரமனின் மனைவி ஜெயப்பிரியா, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு முதுகுப் பகுதியில் ஒரு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதன் பிறகு அவரால் கால் விரல்களைக் கூட அசைக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக விக்ரமன் தன் மனைவியின் நிலைமை குறித்து சொல்லி முதல்வர் உதவி வேண்டுமாறு சமூகவலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டு வேண்டுகோள் வைத்திருந்தார்.

Advertisment

இந்த நிலையில் முதல்வரின் அறிவுறுத்தலின்படி அமைச்சர் மா. சுப்பிரமணியன் விக்ரமன் இல்லத்திற்குச் சென்று நலம் விசாரித்தார். அவருடன் 15க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்கள் சென்று விக்ரமனின் மனைவிக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தொடர் சிகிச்சைகளுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த விக்ரமன், முதல்வருக்கு நன்றி தெரிவித்தார். மேலும், "மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கவில்லை. என்னுடைய மனைவி குணமடைந்தால் போதும்” என்று கூறினார்.

ma.subramanian director
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe