‘வீர தீர சூரன் பாகம் 2’ படத்தின் புதிய அப்டேட்ஸ்

vikram veera dheera sooran 2 audio and trailer update

விக்ரம் நடிப்பில் சித்தா பட இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘வீர தீர சூரன் பாகம் 2’. இப்படம் இரண்டு பாகமாக உருவாகுவதாகவும் முதலில் இரண்டாவது பாகத்தை வெளியிட்டு பின்பு முதல் பாகத்தை வெளியிடலாம் என்ற வித்தியாசமான பிளானில் படக்குழு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்தை ரியா ஷிபு தயாரித்து வர எஸ்.ஜே.சூர்யா, சுராஜ், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து வரும் இப்படத்தின் முதல் பார்வை மற்றும் டைட்டில் டீசர் முன்னதாக வெளியாகியிருந்த நிலையில் பின்பு டீசர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. இப்படம் இம்மாதம் 27ஆம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் ‘ஆத்தி அடி ஆத்தி’ என்ற பாடல் இரண்டாவது பாடலாக வெளியாகியிருந்தது. பின்பு இப்படத்தின் தெலுங்கு டீசர் அண்மையில் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற 20ஆம் தேதி ஆவடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மாலை 7மணி முதல் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

actor vikram Veera Dheera Sooran
இதையும் படியுங்கள்
Subscribe