/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/hrithik.jpg)
புஷ்கர், காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான படம் 'விக்ரம் வேதா'. இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்க, சசிகாந்த் தயாரித்திருந்தார். தமிழில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. தமிழில் இயக்கிய புஷ்கர் மற்றும் காயத்ரியே இந்தியிலும் இயக்குகின்றனர்.
‘விக்ரம் வேதா’ இந்தி ரீமேக்கில் வேதாவாக ஹ்ரித்திக் ரோஷனும், விக்ரமாக சயிஃப் அலிகானும்நடித்துவருகின்றனர். இப்படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், வேதா கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் ஹ்ரித்திக் ரோஷனின்பிறந்தநாளைமுன்னிட்டு வெளியான இப்போஸ்டர் ரசிகர்கள்மத்தியில் வெகுவாகக் கவனம் பெற்றுள்ளது.
Follow Us