Vikram Vedha hindi Trailer out now

புஷ்கர், காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான படம் 'விக்ரம் வேதா'. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் தற்போது இந்தியில் ரீமேக்காகி வருகிறது. இந்தி ரீமேக்கில் வேதாவாக ஹ்ரித்திக் ரோஷனும், விக்ரமாக சயிஃப் அலிகானும் நடித்துள்ளனர். இப்படத்தில் ராதிகா ஆப்தே, ரோஹித் சரஃப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை 'ஒய் ஸ்டுடியோஸ்' சார்பாக பூஷன் குமார் மற்றும் எஸ். சஷிகாந்த் தயாரித்துள்ளனர்.

Advertisment

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் பலரின் கவனத்தை பெற்ற நிலையில் தற்போது படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழைப் போலவே இந்த படமும் கொஞ்சம் கூட விறுவிறுப்பு குறையாமல் அதே அதிரடி சண்டைக் காட்சிகளுடன் சிறு சிறு மாற்றங்கள் செய்து வெளியாகியுள்ள இந்த ட்ரைலர் பாலிவுட் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Advertisment

கடந்த சில மாதங்களாக பாலிவுட்டில் வெளியான படங்கள் தொடர்ச்சியாக மோசமான விமர்சனங்களை பெற்று தோல்வி படமாக அமைந்த நிலையில் வரும் 30 ஆம் தேதி வெளியான விக்ரம் வேதா படம் பாலிவுட் சினிமாவை மீட்டெடுக்கும் எனப் பலரும் கூறி வருகின்றனர்.