/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/195_5.jpg)
புஷ்கர், காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான படம் 'விக்ரம் வேதா'. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் தற்போது இந்தியில் ரீமேக்காகி வருகிறது. இந்தி ரீமேக்கில் வேதாவாக ஹ்ரித்திக் ரோஷனும், விக்ரமாக சயிஃப் அலிகானும் நடித்துள்ளனர். இப்படத்தில் ராதிகா ஆப்தே, ரோஹித் சரஃப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை 'ஒய் ஸ்டுடியோஸ்' சார்பாக பூஷன் குமார் மற்றும் எஸ். சஷிகாந்த் தயாரித்துள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. பலரின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இந்த டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்த டீசர் தமிழில் வெளியான 'விக்ரம் வேதா' படத்திற்கு இணையாக உருவாகியுள்ளது போல் தெரிகிறது. இப்படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)