Advertisment

‘விக்ரம் வேதா’ இந்தி ரீமேக் தொடக்கம்!

vikram vedha

புஷ்கர், காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான படம் 'விக்ரம் வேதா'. இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்க, சசிகாந்த் தயாரித்திருந்தார். தமிழில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. தமிழில் இயக்கிய புஷ்கர் மற்றும் காயத்ரியே இந்தியிலும் இயக்குகின்றனர். படத்தில் நடிக்க ஒப்பந்தமான நடிகர்களின் கால்ஷீட் பிரச்சனை, கரோனா பரவல் எனப் பல்வேறு காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுவந்தது.

Advertisment

alt="ad " data-align="center" data-entity-type="file" data-entity-uuid="84ecbf6b-faeb-4030-8598-8cbefcc175b8" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/udanpirappe-article-inside-500x300_110.jpg" />

Advertisment

‘விக்ரம் வேதா’ இந்தி ரீமேக்கில் வேதாவாக ஹ்ரித்திக் ரோஷனும், விக்ரமாக சயிஃப் அலிகானும் நடிக்க உள்ளதாக சமீபத்தில் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்த நிலையில், ‘விக்ரம் வேதா’ படத்தின் இந்தி ரீமேக்கிற்கான படப்பிடிப்பு ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (15.10.2021) பூஜையுடன் தொடங்கியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் முக்கிய காட்சிகள் சிலவற்றைப் படமாக்கிவிட்டு, படக்குழு இந்தியா திரும்பவுள்ளது. அதனைத் தொடர்ந்து, எஞ்சியுள்ள காட்சிகள் மும்பையில் படமாக்கப்படவுள்ளன.

Saif Ali Khan hrithik roshan
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe