Vikram Veda successfulLY RUNNING Bollywood

கடந்த 2017 ஆம் ஆண்டு புஷ்கர், காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் தமிழில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் விக்ரம் வேதா. இப்படத்திற்கு தமிழில் கிடைத்த வரவேற்பை தொடர்நது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு தற்போது வெளியாகியுள்ளது. இதில் விக்ரமாக சயிஃப் அலிகானும், வேதாவாக ஹ்ரித்திக் ரோஷனும்நடித்துள்ளனர். புஷ்கர் காயத்ரி தம்பதியினரேஇந்தியிலும் இயக்கியுள்ளனர்.

Advertisment

கடந்த வெள்ளியன்று வெளியானஇந்த படம் பாலிவுட்டிலும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி நேர்த்தியாக இயக்கி இருந்ததாகவும், படத்தின் வெற்றிக்கு சாம் சி எஸ்ஸின்நுட்பமான பின்னணியிசையும் காரணம் என்றும் ரசிகர்களும், விமர்சகர்களும் நேர்மறையான விமர்சனத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் சாம்சி.எஸ் தென்னிந்திய ரசிகர்களை தாண்டி பாலிவுட் ரசிகர்கள் மத்தியிலும்பிரபலமடைந்துள்ளார்.

Advertisment

சமீபகாலமாக தொடர் சறுக்கலை சந்தித்து வந்த பாலிவுட் திரையுலகம், விக்ரம் வேதா படத்திற்கு கிடைத்துவரும் வரவேற்பால் மீண்டெழுந்து உள்ளது.