Advertisment

"ஹாட்ஸ் ஆப் மகனே... தேங்க்ஸ் பாபி" - விக்ரமிடமிருந்து வந்த திடீர் அறிக்கை

vikram thanked mahaan movie team

Advertisment

விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் மகான் படத்தை இயக்கிருந்தார். இப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்துநடிகர் விக்ரம் படக்குழு மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "வாழ்க்கையில் நாம் விரும்பி செய்த ஒரு விஷயம் வெற்றியை தொடும்போது கிடைக்கும் சந்தோஷத்திற்கு அளவே இல்லை, மகானில் நடித்த ஒவ்வொரு நொடியும் என் மனதில் இன்றும் ஒரு "sweet" கனவாய் நிற்கிறது. அதே மகான் நான்கு மொழிகளில் அனைவரும் கண்டு ரசித்த ஒரு பிரமாண்ட வெற்றி படம் என்று நினைக்கும்போது... மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ், மீம்ஸ், ட்விட்ஸ் மற்றும் மெஸேஜஸ் வாயிலாக மகானை கொண்டாடிய அனைவரின் அன்பையும், ஆதரவையும் உணர்ந்தேன். இந்த அன்புதான் என்னை மென்மேலும் பாடுபட ஊக்குவிக்கிறது. இதை என்றும் அன்புடனும், பணிவுடனும் நன்றி மறவாமல் நினைவில் கொள்வேன்.அப்படியே ஒரு வியக்கத்தக்க கேன்வாசில் மகானை கொண்டு போய் நிறுத்திய கார்த்திக் சுப்புராஜின் கைவண்ணம், எனக்கு அன்பாய் வழங்கிய சுதந்திரம், சின்ன சின்ன விஷயங்களை ரசித்து வழி நடத்திய விதம்... அழகு நன்றிகள் பல்லாயிரம்.

பாபிக்கு thanx நீ இல்லாமல் என் சத்யா சாத்தியமே இல்லை. சிறப்பாக நடிப்பது தனக்கொரு இயல்பான talentனு மீண்டும் சுட்டி காட்டிய சிம்ரனுக்கு thank you. த்ருவ் தனக்குள் இருக்கும் திறமையையும், தனித்துவத்தையும் வெளியே கொண்டுவந்து சவாலாக இமேஜ் தாண்டியதிற்கு, hats-off மகனே. வியர்வை, ரத்தம், (நிஜமான) கண்ணீர் சிந்தி மகானின் வெற்றிக்கு உழைத்த மகான் கேங்கிற்கு ஒரு பெரிய salute. எங்களுடன் நீயா, நானா' என்று வெறியோடு போட்டி போட்டு கலக்கிய சனா, ஷ்ரேயெஸ், தினேஷ்.. Rock Ont மகானை நிஜமாக்கிய தயாரிப்பாளருக்கும், உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இல்லங்களிலும், உள்ளங்களிலும் கொண்டு சேர்த்த அமேசான் பிரைம் வீடியோவுக்கும் a big thankyou" எனக் குறிப்பிட்டுள்ளார்.

bobby simha dhruv vikram mahaan actor vikram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe