vikram thangalaan teaser released

பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தங்கலான்'. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். கோலார் தங்க வயலை மையமாக வைத்து இப்படம் உருவாக்குவதால் கர்நாடகாவின் கோலார் பகுதியில் பல மாதங்களாகப் படப்பிடிப்பை நடத்தினர். இதனிடையே சென்னையிலும் படப்பிடிப்பைத்தொடர்ந்தனர்.

Advertisment

இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு மற்றும் படப்பிடிப்பின் மேக்கிங் வீடியோ வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. அடுத்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டுவெளியாகவுள்ளது. தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகிறது. இப்படத்தின் டீசர் இன்று வெளியாகும் எனப்படக்குழு முன்பு அறிவித்த நிலையில் தற்போது டீசர் வெளியாகியுள்ளது.

Advertisment

டீசரைபார்க்கையில், கோலார் தங்க வயல் பகுதியில் வாழும் மக்களுக்கும் அந்த தங்கத்தை எடுத்துச் செல்ல வரும் ஆங்கிலேயர்களுக்கும் இடையே நடக்கும் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ளது போல் தெரிகிறது. டீசரில் வசனம் எதுவும் வரவில்லை. மேலும் ரத்தக் காட்சிகள், போர்க் காட்சிகள் அதிகம் இருக்கிறது. இந்த டீசர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.