சீயான் விக்ரம் மகன் துருவ் தற்போது 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக்கான 'வர்மா' படத்தில் நடித்துள்ளார். அறிமுக நாயகி மேகா, பிக்பாஸ் ரைசா, ஈஸ்வரி ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை பாலா இயக்கியுள்ளார். படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் துருவ் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அப்போது விழாவில் கலந்துகொண்ட சீயான் விக்ரம் பேசும்போது....
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
"நான் பணியாற்றிய இயக்குனர்கள் அனைவரும் சிறந்தவர்கள். அவர்கள் ஒவ்வொவருவருக்கும் ஒரு சிறப்பு இருக்கும். அதுபோல் இயக்குனர் பாலாவிடம் உள்ள சிறப்பு ஒரு கல்லை கூட நடிக்க வைத்து விடுவார். அந்த அளவுக்கு அவர் திறமைசாலி. பெரும்பாலான இயக்குனர் படத்தில் பல விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவார்கள். ஆனால் பாலா நடிகர்களின் நடிப்பில் மட்டுமே அதிக கவனம் செலுத்துவார். அதனால் தான் அவர் படத்தில் நடிக்கிறவர்கள் நன்றாக நடிக்கிறார்கள். என்னையே நடிக்க வைத்தாரென்றால் பார்த்துக்கொள்ளுங்கள். மேலும் துருவ் படத்தை சிறு வயது முதல் அவர் தான் இயக்கவேண்டும் என்று எண்ணினார். மேலும் இப்படத்தில் நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் வேறு உள்ளது. எனவே எனக்கு எப்படி பாலா திருப்புமுனையாக இருந்தாரோ அதுபோல் என் மகனுக்கும் அவரே முதல் படத்தை இயக்க வேண்டும் மேலும் நல்ல மோதிர கையால் குத்தப்படவேண்டும் என்று எண்ணினேன். அதன்படியே நடந்தது. ரீமேக் படங்களே இயக்காத பாலா எனக்காகவும், துருவ்வுக்காகவும் ஒத்துக்கொண்டதற்கு நன்றி. அவர் முதல் முறையாக புதுமுகங்கள் வைத்து இயக்கியுள்ளார். மேலும் துருவ்வும் நன்றாக நடித்திருப்பான் என்ற நம்பிக்கை உள்ளது. வந்திருந்த அனைவருக்கும் நன்றி. இதில் எனக்கு சிலர் துரோகிகளாக மாறிவிட்டனர். இனி நான் உங்கள் ரசிகர் இல்லை. துருவ்வின் ரசிகர் என்று கட்சி மாறிவிட்டனர். அவர்களை நான் பின்னாடி கவனித்து கொள்கிறேன்" என்றார் ஆனந்த குமுறலோடு.
விக்ரம் பேசிய வீடியோவிற்கு கீழே கிளிக் செய்யவும்.
{"preview_thumbnail":"/s3/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/oJJ6vfjPhiM.jpg?itok=XUSaDGC_","video_url":" Video (Responsive, autoplaying)."]}