Vikram starring Cobra shoot wrapped over

Advertisment

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் படம் 'கோப்ரா'. இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார்.இர்ஃபான் பதான், கே.எஸ். ரவிக்குமார், ஜான் விஜய் ஆகியோர் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதில் நடிகர் விக்ரம் 7 கெட்டப்பில் நடித்துள்ளார். செவன் ஸ்கிரீன்ஸ் சார்பில், தயாரிப்பாளர் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ஏற்கனவே வெளியான 'கோப்ரா' படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. கடந்த 2019 ஆம் ஆண்டேஇப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கிய நிலையில் இயக்குநர் கதையை முடிக்காத காரணத்தால் படத்தின் படப்பிடிப்பு நீண்டுகொண்டே போனதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கோப்ரா படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளது. இதனைபடக்குழுவினர் அனைவரும் கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இயக்குநர் அஜய் ஞானமுத்து மூன்று ஆண்டுகால படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். அத்துடன் படக்குழுவினர் அனைவருக்கும்நன்றி தெரிவித்துள்ளார்.