Skip to main content

“நம்முடைய சமுதாயத்தில் சில கெட்ட விஷயங்களும் இருக்கிறது...” - விக்ரம்

Published on 01/11/2023 | Edited on 01/11/2023

 

vikram speech at thangalaan teaser launch

 

பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தங்கலான்'. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். கோலார் தங்க வயலை மையமாக வைத்து உருவாகும் இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளது. தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகிறது. 

 

இந்த நிலையில் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. மேலும் டீசர் வெளியீட்டு விழாவில், விக்ரம், பா. ரஞ்சித் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய விக்ரம், "எங்க அப்பா சொல்வார், இன்றைக்கு நடப்பது நாளைக்கு வரலாறு என்று. அதில் நல்ல விஷயங்களை நாம் கொண்டாட வேண்டும். கெட்ட விஷயங்களை மறக்கக் கூடாது. ஆனால் அது இனிமேல் நடக்காமல் இருக்க முயற்சிக்க வேண்டும். இந்த படத்தின் முயற்சி என்னவென்றால், அடிமைத்தனத்தை பற்றி அமெரிக்கா, சைனா உள்ளிட்ட நகரங்களில் வரலாறு இருக்கிறது. 

 

அதேபோல் இந்தியாவிலும் நம்முடைய சமுதாயத்தில் சில கெட்ட விஷயங்களும் இருக்கிறது. நிறைய நல்ல விஷயங்களும் இருக்கிறது. ஆனால் கெட்ட விஷயங்கள் ஆங்கிலேய காலத்தில் இருந்ததாக தெரியுமே தவிர சில விஷயங்கள் காலப்போக்கில் மறந்துவிடுகிறோம். இப்போது இருக்கிற தலைமுறைகளுக்கு அது பற்றி தெரியுமா என்று கூட தெரியவில்லை. அது பற்றி யோசிக்கிற பொழுது பாடமாக மட்டும் தான் இருக்கும். ஆனால் இந்த படத்தில் அழுத்தமான காட்சிகள், சோகம் அதிகம் இல்லாமல் எல்லாமே இருக்கும். 

 

இப்போது டைட்டானிக் படத்தில் காதல் தான் கதை. ஆனால் டைட்டானிக் கப்பலை பின்னணியில் வைத்துவிட்டு காதலை எப்படி சித்தரித்தார்கள். அதுதான் அந்த படத்தின் வலு. அதே மாதிரி இந்த படத்தில் அந்த காலகட்டத்தில் ஒரு சமுதாயம் எப்படி இருந்தது, மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை காட்டும். ஒவ்வொரு காட்சியும் மக்களை அழ வைக்க வேண்டும் என்ற நோக்கில் இருக்காது. யதார்த்தமாக உண்மையாக இருக்கும். என்ன அழகு என்றால் எந்த இடத்திலும் செட் போட்டு எடுக்கவில்லை. கே.ஜி.எஃப் பகுதியில் தங்கி எடுத்தோம். இந்த மாதிரி அனுபவம் இனி கிடைக்குமா என தெரியவில்லை. 4 மணி நேரத்திற்கு மேல் மேக்கப் இருக்கும். பயங்கர குளுரா இருக்கும். ஆனால் ஒவ்வொரு நாளும் காலையில் நடிக்க ஆர்வமாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.  

 

ரஞ்சித் ஒரு பெரிய டைரக்டர். மெட்ராஸ் படத்திலிருந்து அவருடைய படங்கள் எல்லாமே ரொம்ப பிடிக்கும். எல்லாருக்கும் தெரியும் சார்பட்டா பரம்பரையில் எந்த அளவிற்கு பண்ணியிருந்தார் என்று. ஆனால் அதைவிட 100 மடங்கு இதில் பண்ணியிருக்கார். அவருடன் பணியாற்றியது அழகான அனுபவம். இந்த படம் சாதாரணமான ஒரு படமாக இருக்காது. இந்திய சினிமாவில் ஒரு புது பார்வையை உண்டாக்கும்" என்றார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விக்ரம் மீது காவல் நிலையத்தில் புகார்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
case against vikram regards veera dheera sooran movie poster

விக்ரம் தற்போது பா. ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் நடித்துள்ளார். ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜி.வி. பிரகாஷ்குமார் இசையில் உருவாகும் இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. 

இதையடுத்து சித்தா பட இயக்குநர் எஸ்.யு. அருண்குமாருடன் கூட்டணி வைத்துள்ளார். ரியா ஷிபு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் அறிவிப்பு ஒரு ப்ரோமோ வீடியோவுடன் கடந்த அக்டோபரில் வெளியானது. அடுத்ததாக துஷாரா விஜயன், எஸ்.ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு உள்ளிட்டோர் இப்படத்தில் இனைந்துள்ளதாக அறிவிப்புகள் வெளியானது. 

இதனைத் தொடர்ந்து கடந்த விக்ரம் பிறந்தநாளான 17ஆம் தேதி, விக்ரமிற்கு வாழ்த்து தெரிவித்து படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. ‘வீர தீர சூரன்’ என தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. மேலும் டீசரில் விக்ரம் துப்பாக்கியுடன் வரும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இதையடுத்து அதே நாளில் படத்தின் டைட்டில் அடங்கிய புதிய போஸ்டரும் வெளியிடப்பட்டது. அதில் விக்ரம் தனது இரு கைகளிலும் அறுவா வைத்திருக்கும்படி புகைப்படம் இடம்பெற்றிருந்தது. 

case against vikram regards veera dheera sooran movie poster

இந்த நிலையில் அந்த போஸ்டரை சுட்டிக்காட்டி விக்ரம் மீது ஆன்லைன் வாயிலாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை சென்னை கொருக்குப்பேட்டையில் வசிக்கும் சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ செல்வம் என்பவர் கொடுத்திருக்கும் நிலையில் அந்த புகாரில், “விக்ரமின் 'வீர தீர சூரன்' திரைப்படத்தின் போஸ்டரில் விக்ரம் அரிவாள்களுடன் இருப்பது போன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. விக்ரம் இளைஞர்கள் மத்தியில் தவறான எண்ணத்தை கொண்டு செல்கிறார். அதனால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். 

Next Story

வீர தீர சூரனாக மாறிய விக்ரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
vikram 62 title as Veera Dheera Sooran

தமிழ் சினிமா ஹீரோவில், ஹேட்டர்ஸே இல்லாத எல்லா தரப்பு மக்களுக்கும் பிடித்தமான நடிகராக வலம் வருபவர் விக்ரம். தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு உயிரூட்டும் வகையில் தனது அர்ப்பணிப்பை கொடுக்கும் முன்னணி நடிகர்களில் இவரும் ஒருவர். முன்னணி நடிகர் என்ற அந்தஸ்து பெற்றாலும் தொடர்ச்சியாக வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். அவர் நடித்த காசி, பிதாமகன், அந்நியன், தெய்வத்திருமகள், ஐ உள்ளிட்ட படங்கள் அவரது அர்ப்பணிப்பிற்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றன. 

அந்த வரிசையில் தற்போது தங்கலான் படம் உருவாகி வருகிறது. மேலும் சித்தா பட இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார். இந்தச் சூழலில் இன்று பிறந்தநாள் காண்கிறார் விக்ரம். அதனால் ரசிகர்கள் முதல் திரைப் பிரபலங்கள் வரை அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தங்கலான் படக்குழு, விக்ரமிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு ஸ்பெஷல் வீடியோவை சர்பிரைஸாக வெளியிட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து தற்போது அருண் குமார் படக்குழு தற்போது படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்டுள்ளது. ரியா ஷிபு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் அறிவிப்பு ஒரு ப்ரோமோ வீடியோவுடன் கடந்த அக்டோபரில் வெளியானது. மேலும் துஷாரா விஜயன், எஸ்.ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 

இப்படத்திற்கு ‘வீர தீர சூரன்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில் டைட்டில் டீசர், படத்தின் ஒரு காட்ச்சியை கட் செய்து வைத்துள்ளனர். விக்ரமை கொலை செய்ய ஒரு கும்பல், திட்டமிட்டு அவர் வேலை பார்க்கும் மளிகை கடைக்கு செல்கிறது. ஆனால் அக்கும்பலை விக்ரம் துப்பாக்கியால் தாக்குகிறார். இந்த டீசர் தற்போது ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.