vikram sixpack

கடாரம் கொண்டான் படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரம், 'கோப்ரா' மற்றும் 'பொன்னியின் செல்வன்' படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதில் கோப்ரா படத்தில் முழு வீச்சில் நடித்து வந்தார். கரோனா அச்சுறுத்தல் காரணமாக கோப்ரா ஷூட்டிங் மற்றும் பொன்னியின் செல்வன் ஷூட்டிங் இரண்டுமே தடைப்பட்டது.

Advertisment

இந்த ஷூட்டிங் முடிந்ததும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள படத்தில் விக்ரமும், அவரது மகனும் இணைந்து நடிக்கின்றனர். இந்த லாக்டவுன் காலகட்டத்தில் விக்ரம் வீட்டைவிட்டு வெளியேறவே இல்லை.

Advertisment

இதனிடையே, தற்போது விக்ரம் 6 பேக்குடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.