
'மாநகரம்', 'கைதி', 'மாஸ்டர்' ஆகிய வெற்றிப் படங்களை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். அப்படங்களுக்கு ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால், தமிழ் சினிமாவின் 'மோஸ்ட் வான்டட்' இயக்குநராக உயர்ந்தார் லோகேஷ். 'மாஸ்டர்' படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி வெளியானது. இதையடுத்து கமலின் பிறந்தநாளான நவம்பர் 7 அன்று 'விக்ரம்' என பெயரிடப்பட்ட இப்படத்தின் டைட்டில் டீஸர் வெளியாகி வைரலானது.
இதைத் தொடர்ந்து, விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், 'விக்ரம்' படப்பிடிப்பை வரும் மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 'விக்ரம்' படத்தின் முழு திரைக்கதையையும் லோகேஷ் கனகராஜ் தயார் செய்துவிட்டார். அதைப் படித்த கமல்ஹாசன், அதில் சில திருத்தங்களைக் கூறியுள்ளார். அதை தற்போது லோகேஷ் சரி செய்து வருவதாகவும், விரைவில் திரைக்கதையை முடித்து திட்டமிட்ட தேதியில் ஷூட்டிங்குக்கு கிளம்பவுள்ளதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)