Advertisment

பிரபல இயக்குநர் இயக்கத்தில் விக்ரம்

vikram in santhakumar direction

Advertisment

விக்ரம் தற்போது பா.ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் நடித்துமுடித்துள்ளார். இதில் பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். கோலார் தங்க வயலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து எஸ்.யு அருண்குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் படத்தில் நடித்து வருகிறார். ரியா ஷிபு தயாரிக்கும் இப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் விக்ரம் நடிக்கும் அடுத்த படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் சாந்தகுமார் சமீபத்தில் விக்ரமிடம் ஒரு கதை கூறியுள்ளதாகவும் அக்கதை விக்ரமிற்கு பிடித்துவிட்டதாகவும் அதனால் அவர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. சாந்தகுமார் இதுவரை மௌனகுரு, மகாமுனி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இதையடுத்து சமீபத்தில் வெளியான ரசவாதி படத்தை இயக்கியிருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

Santha Kumar actor vikram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe