தீபாவளி ரேசில் இணைந்த விக்ரம் பிரபு படம்

vikram prabhu raid movie to release in coming diwali

விக்ரம் பிரபு நடிப்பில் இந்தாண்டு தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் வெளியாகி வருகிறது. பொன்னியின் செல்வன் 2, பாயும் ஒளி நீ எனக்குமற்றும் இறுகப்பற்று. சமீபத்தில் வெளியான இறுகப்பற்று ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இதனிடையே இயக்குநர் முத்தையா வசனத்தில், ரெய்டு என்ற தலைப்பில் ஒரு படம் நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக ஸ்ரீ திவ்யா நடித்துள்ளார். கனிஷ்க் மற்றும் மணிகண்ணன் தயாரிக்கும் இப்படத்தை கார்த்தி என்பவர் இயக்கியுள்ளார். இப்படம் கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியிடத்திட்டமிட்டது. சில காரணங்களால் படம் வெளியாகவில்லை.

இந்த நிலையில், இப்படத்தின்ரிலீஸ் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற தீபாவளியை முன்னிட்டு இப்படம் வெளியாகும் என போஸ்டர் ரிலீஸாகியுள்ளது. ஏற்கனவே தீபாவளி ரேசில் கார்த்தி - ராஜு முருகன் கூட்டணியில் உருவாகும் ஜப்பான், கார்த்திக் சுப்புராஜ் - ராகவா லாரன்ஸ் கூட்டணியில் உருவாகும் ஜிகர்தண்டா 2 உள்ளிட்ட படங்கள் இருக்கும் நிலையில் தற்போது விக்ரம் பிரபு படமும் இணைந்துள்ளது.

vikram prabhu
இதையும் படியுங்கள்
Subscribe