/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/379_2.jpg)
விக்ரம் பிரபு, 'டாணாக்காரன்'படத்தைத்தொடர்ந்து 'பாயும் ஒளி நீ எனக்கு' படத்தில் நடித்து முடித்துள்ளார். 'கார்த்திக்மூவிஹவுஸ்' சார்பாகஇப்படத்தைதயாரித்து இயக்குகிறார் அறிமுக இயக்குநர் கார்த்திக்அத்வைத். இப்படத்தில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாகவாணிபோஜன்நடிக்கக்கன்னட நடிகர் தனஞ்சயா மற்றும் விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் மணி சர்மாவின் மகன் சாகர், தமிழ்சினிமாவிற்குஅறிமுகமாகிறார். கடந்த ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்றுபோஸ்ட்ப்ரொடக்ஷன்பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 'பாயும் ஒளி நீ எனக்கு' படத்தின்டீசர்தற்போது வெளியாகியுள்ளது. இதனை கார்த்தி தனதுட்விட்டர்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வசனங்கள் ஏதும் இல்லாமல் முழுக்க முழுக்கஆக்ஷன்காட்சிகள் நிறைந்து வெளியாகியுள்ள இந்தடீசர்ரசிகர்களிடையே நல்லவரவேற்பைப்பெற்று வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)