vikram prabhu

Advertisment

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் கடைசியாக வெளியான 'புலிக்குத்தி பாண்டி' திரைப்படம் நேரடியாகத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. படத்திற்குக்கலவையான விமர்சனங்கள் கிடைத்தபோதும் டி.ஆர்.பி. ரேட்டிங்கில் படம் புதிய சாதனையைப் படைத்தது.

இந்த நிலையில், விக்ரம் பிரபு நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. 'பகையே காத்திரு' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை, மணிவேல் இயக்குகிறார். படத்தில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக ஸ்மிருதி வெங்கட் நடிக்கிறார். வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் வித்யா பிரதீப் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.ராசி முத்துச்சாமி தயாரிக்கிறார்.