/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/75_29.jpg)
விக்ரம் பிரபு, 'டாணாக்காரன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'பாயும் ஒளி நீ எனக்கு', 'இரத்தமும் சதையும்' படங்களில் நடித்து வருகிறார். இதில் 'பாயும் ஒளி நீ எனக்கு' படத்தை கார்த்திக் அத்வைத் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்று போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே 'இரத்தமும் சதையும்' படத்தை ஹரேந்தர் பாலச்சந்தர் இயக்குகிறார். இப்படம் பல உண்மை சம்பவங்களை தழுவி உருவாகிறது.
இந்நிலையில் விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை லோகேஷ் கனகராஜ், வெங்கட் பிரபு உள்ளிட்ட சில திரை பிரபலங்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். கனிஷ்க் மற்றும் மணிகண்ணன் தயாரிக்கும் இப்படத்திற்கு முத்தையா வசனம் எழுதுகிறார், கார்த்தி என்பவர் இயக்குகிறார். 'ரெய்டு' என தலைப்பு வைக்கப்பட்டு வெளியாகியுள்ள இப்போஸ்டரில் விக்ரம் பிரபு முகத்தில் ரத்தக்கறையுடன் கையில் பெரிய கத்தியுடன் நிற்கிறார். சாம் சி.எஸ் இசையில் உருவாகும் இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)