vikram prabhu

Advertisment

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், முத்தையா இயக்கத்தில் உருவான ‘புலிக்குத்தி பாண்டி’ திரைப்படம் பொங்கல் தினத்தையொட்டி சன் டிவியில் நேரடியாகஒளிபரப்பப்பட்டது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தபோதும், டி.ஆர்.பி. ரேட்டிங்கில் படம் புதிய சாதனை படைத்தது. இந்த வெற்றி தந்த உற்சாகத்தில் உள்ள விக்ரம் பிரபு, அடுத்ததாக நடிக்க உள்ள படம் 'டாணாக்காரன்’. வெற்றிமாறனினிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய தமிழ் இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்தில், சுதந்திரத்திற்கு முந்தைய கால போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக அஞ்சலி நாயர் நடிக்கிறார். இவர், ‘நெடுநல்வாடை’ படத்தில் நடித்துப் பிரபலமானவர் ஆவார். ஜிப்ரான் இசையமைக்க, எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்.

தற்போது வெளியாகியுள்ளஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ரசிகர்களிடைய கவனம் பெற்று வருகிறது.