Advertisment

அஜித் ஸ்டைலில் விக்ரம் பிரபு 

vikram prabhu

Advertisment

'60வயது மாநிறம்' படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம்பிரபு 'துப்பாக்கி முனை' படத்தில் நடித்து வருகிறார். செண்டிமெண்ட் மற்றும் ஆக்க்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப்படத்தில்ஹன்சிகா மோத்வானி முதன் முறையாக விக்ரம்பிரபுவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு மிக பிரமாண்டமாக தயாரித்துள்ள இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள்ராமேஸ்வரம், தனுஷ்கோடி மற்றும் அதனை சுற்றியுள்ள தீவுகளில்இதுவரை யாரும் படம் பிடிக்காதபகுதிகளில்படமாக்கப்பட்டுள்ளன. மேலும் மும்பை, டெல்லி, மதுரை மற்றும் சென்னை ஆகிய இடங்களில் தொடர் படப்பிடிப்பு நடத்தி 40 நாட்களில் மொத்த படப்பிடிப்பையும் படக்குழுவினர்முடித்துள்ளனர். மணிரத்னத்தின் இணை இயக்குனரான தினேஷ் செல்வராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் வேல.ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், 'ஆடுகளம்' நரேன், 'மிர்ச்சி' ஷா, மாரிமுத்து, தீனா, பரத்ரெட்டி, கல்யாணி நட்ராஜ், வின்சென்ட் அசோகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் குறித்து இயக்குனர் தினேஷ் செல்வராஜ் பேசியபோது...

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

"சட்டத்தை இந்த சமூகம் கேடயமாகப்பயன்படுத்துகிறது. ஆனால் அதை நான் வாளாகப்பயன்படுத்துகிறேன். முன்பு வறுமை குற்றவாளிகளை உருவாக்கியது. இன்று அதிகாரம் குற்றவாளிகளை உருவாக்குகிறது. 'தேசத்தந்தை காந்தியை சுட்ட துப்பாக்கி தவிர சமுதாயத்திற்காக சந்தன மரமாய் தேய்ந்து தேய்ந்து மனம் வீசிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு போலீசாரிடமும் உள்ள துப்பாக்கிகள் எல்லாம் மதிப்பு மிக்கவை' என்பது என்கவுண்டர்ஸ்பெசலிஸ்ட் பிர்லா போஸின் தலையாயகருத்து. தன் கருத்தில் உறுதியாக இருக்கும் பிர்லா போஸின் வாழ்க்கையில் அவர் இழந்தது என்ன..? பெற்றது என்ன..? என்பதே இந்த 'துப்பாக்கி முனை'யின் கதை சுருக்கம். மேலும் போலீஸ் அதிகாரி பிர்லா போஸ் கதாபாத்திரத்திற்காக நரைமுடி தலையுடன் 45 வயது தோற்றத்தில் விக்ரம்பிரபு சிறப்பாக நடித்துள்ளார். படத்தின் கதையும், விக்ரம்பிரபுவின் வித்தியாசமான தோற்றமும் படத்தின் பெரும் பலமாக அமைந்துள்ளது" என்றார். முதன்முதலில் அஜித் நரைமுடி தலையுடன் கூடிய ஸ்டைலில் 'மங்காத்தா' ஹிட் அடித்தது.அஜித் ஸ்டைலில் சால்ட் அண்ட் பெப்பரில் விக்ரம் பிரபு கலக்குவார் என்கின்றனர் படக்குழுவை சேர்ந்தவர்கள்.

thupakkimunai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe