Advertisment

‘கட்டி வச்ச சோகம், கரைஞ்சி போவாதோ...’ - வெளியான தங்கலான் அப்டேட் 

vikram pa ranjith thangalaan update

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தங்கலான்’. இதில் பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். கோலார் தங்க வயலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.

Advertisment

இப்படத்தின் டிரெய்லர் கடந்த 10ஆம் தேதி வெளியாகி பலரது கவனத்தை பெற்றது. மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது. இதைத் தொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் ‘மினிக்கி மினிக்கி’ பாடல் இன்று வெளியாகும் எனத்தெரிவித்திருந்த நிலையில், அப்பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலை சிந்துரி விஷால் பாடியிருக்க உமா தேவி வரிகள் எழுதியுள்ளார். சாண்டி மாஸ்டர் நடனமைத்துள்ளார்.

Advertisment

யூட்யூபில் வெளியாகியுள்ள லிரிக்கல் வீடியோவில், கோலார் தங்க வயல் பகுதியில் வாழும் மக்களின் வாழ்வியலையும், ஒருவருக்குள்ளும் இருக்கும் காதலையும் விவரிக்கும் ஒரு கொண்டாட்ட பாடலாக இப்படல் அமைந்துள்ளது. பாடலில் வரும் ‘கும்பல் கூடும் மேகம் மழைய பெய்யாதோ, கட்டி வச்ச சோகம் கரைஞ்சு போகாதோ...’ உள்ளிட்ட பல வரிகள் ரசிகர்களின் கவனத்தை பெறுகிறது. இப்பாடலை தொடர்ந்து விரைவில் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

actor vikram GV prakash pa.ranjith
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe