பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தங்கலான்’. இதில் பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். கோலார் தங்க வயலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.
இப்படத்தின் டிரெய்லர் கடந்த 10ஆம் தேதி வெளியாகி பலரது கவனத்தை பெற்றது. மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது. இதைத் தொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘மினிக்கி மினிக்கி’ பாடல் கடந்த 17ஆம் தேதி வெளியானது. இப்பாடலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 15ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.