vikram next movie with su arunkumar

Advertisment

விக்ரம் தற்போது பா. ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் நடித்துள்ளார். ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜி.வி. பிரகாஷ்குமார் இசையில் உருவாகும் இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது. டீசர் வருகிற நவம்பர் 1 ஆம் தேதி வெளியாகிறது .

இதனிடையே கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் அடுத்த மாதம் 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது. நீண்ட காலமாக இப்படம் உருவாகி வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

இந்த நிலையில் விக்ரம் நடிக்கும் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி உள்ளிட்ட சில படங்களை இயக்கிய நிலையில் சித்தார்த்தை வைத்து இவர் இயக்கிய சித்தா படம் பலரது பாராட்டைப் பெற்றது. இதைத்தொடர்ந்து முன்னணி நடிகரான விக்ரமுடன் கைகோர்த்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisment

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ரியா ஷிபு தயாரிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அறிவிப்பு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில்அதிரடி ஆக்‌ஷனுடன் காட்சிகள் அமைந்துள்ளன.