ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்; புதிய அறிவிப்பை வெளியிட்ட 'விக்ரம்' படக்குழு

vikram movie trailer and audio release on may15

‘மாஸ்டர்’ படத்தின்வெற்றியைத்தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல்ஹாசனை வைத்து 'விக்ரம்' படத்தை இயக்கி வருகிறார். இதில் விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில்,அஞ்சாதே நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் அனைத்து படப்பிடிப்புகளை நிறைவு செய்த படக்குழு, அடுத்தகட்ட பணியில் கவனம் செலுத்தி வருகிறது. விக்ரம் படத்தின் திரையரங்கு வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இப்படம் வரும் ஜூன் 3ஆம் தேதி திரையரங்குகளில்வெளியாக உள்ள நிலையில் தற்போது படத்தின் ட்ரைலர்மற்றும் இசை வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படிவிக்ரம் படத்தின் ட்ரைலர்மற்றும் இசை வரும் 15 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் படத்தின் ட்ரைலர்மற்றும் இசை வெளியாவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும்எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ACTOR KAMAL HASSHAN actor vijay sethupathi kamalhaasan lokesh kanagaraj vikram movie
இதையும் படியுங்கள்
Subscribe