"தலைமுறைகளைத் தாண்டி என்னை ரசிக்கின்றனர்" - கமல்ஹாசன் நெகிழ்ச்சி

vikram movie succesfully crossing 100 days kamal audio note release

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'விக்ரம்'. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் 400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மேலும் ரசிகர்களின் பேராதரவை பெற்று தற்போது வரை சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் 'விக்ரம்' படம் 100 நாட்களை கடந்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இது தொடர்பாக கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "ரசிகர்களின் ஆதரவோடு விக்ரம் திரைப்படம் 100-வது நாளை எட்டியிருக்கிறது. மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறேன். தலைமுறைகளை தாண்டி என்னை ரசிக்கும் உங்கள் ஒவ்வொருவரையும் மானசீகமாக தழுவிக்கொள்கிறேன். விக்ரம் வெற்றிக்கு காரணமாக இருந்த ஒவ்வொருவருக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகள். தம்பி லோகேஷுக்கு எனது அன்பும் வாழ்த்தும்." என நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

ACTOR KAMAL HASSHAN lokesh kanagaraj vikram movie
இதையும் படியுங்கள்
Subscribe