Kamal Haasan

‘மாஸ்டர்’ படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசனை நாயகனாக வைத்து படம் இயக்குகிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். ‘விக்ரம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் பலரும் நடிக்கின்றனர். இப்படம் குறித்த அறிவிப்பு பல மாதங்களுக்கு முன்னரே வெளியிடப்பட்ட நிலையில், சட்டமன்றத் தேர்தல் மற்றும் கரோனா பரவல் காரணமாக படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமலேயே இருந்தது.

Advertisment

தற்போது கரோனா பரவலின் தாக்கம் குறைந்துவருவதையடுத்து, ‘விக்ரம்’ படத்தின் பணிகளைப் படக்குழு முடுக்கிவிட்டுள்ளது. கடந்த வாரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்ட நிலையில், படப்பிடிப்பு இன்று (16.07.2021) தொடங்கப்பட்டுள்ளது. முதல் நாள் படப்பிடிப்பில் நடிகர் விஜய் சேதுபதி, கமல்ஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுவருகின்றன. படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகின்றன.

Advertisment