/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vikram_10.jpg)
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் 'மகான்'படத்தில் விக்ரமும் துருவ்விக்ரமும்நடித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் இணைந்து நடிப்பது இதுவே முதல் முறையாகும். சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தை 7 ஸ்கிரீன்ஸ்டூடியோமூலம் லலித் குமார் தயாரிக்கிறார். ;மகான்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் இறுதிக் கட்ட பணியில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் 'மகான்' படத்தின்ரிலீஸ் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி 'மகான்' திரைப்படம் ஓடிடி தளத்தில் நேரடியாகவெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக முன்னணி ஓடிடி தளம் ஒன்றிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில்இறுதி முடிவு எட்டப்பட்டுள்ளதாகவும்,விரைவில் இது குறித்த அறிவிப்பு படக்குழு தரப்பில் இருந்து வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நடிகர் தனுஷை வைத்து இயக்கிய'ஜகமே தந்திரம்' திரைப்படம் நீண்ட இழுபறிகளுக்குப் பிறகு ஓடிடி தளத்தில் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)