/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/glance.jpg)
மாஸ்டர் படத்தின் வெற்றியைத்தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல்ஹாசனை வைத்து 'விக்ரம்' படத்தை இயக்கி வருகிறார். இதில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், அஞ்சாதே நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். விக்ரம் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவேகமல்ஹாசன், விஜய் சேதுபதி,ஃபகத் ஃபாசில்ஆகிய மூவரும் உள்ள போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு விக்ரம் படத்தின் முதல் பார்வை வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், அதிரடி ஆக்சன் காட்சிகள் நிறைந்த மாஸான தோற்றத்தில் நடிகர் கமல்ஹாசன் தோன்றியுள்ளார். கமல் ரசிகர்களுக்கு பிறந்தநாள் விருந்தாக அமைந்த இந்த முதல் பார்வை வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)