Advertisment

கங்கனா படத்தில் இணையும் விக்ரம்; வெளியான லேட்டஸ்ட் தகவல்

Vikram joins Kangana ranaut The Incarnation - Sita film

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' படம் சில தினங்களுக்கு முன்ப வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து அடுத்தாதக பா.ரஞ்சித் இயக்கும் 'சியான் 61' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் கே.இ ஞானவேல்ராஜா தயாரிக்க ஜி. வி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில் விக்ரம் அடுத்ததாக கங்கனா ரணாவத் நடிக்கும் சீதா (The Incarnation - Sita) படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு பாகுபலி மற்றும் ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு கதை எழுதிய விஜயேந்திர பிரசாத் கதை எழுதிவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை அலௌகிக் தேசாய் இயக்குகிறார்.

Advertisment

இதனிடையே இப்படத்தின் இயக்குநர் அலௌகிக் தேசாய், விக்ரமை சந்தித்து கதை சொன்னதாகவும், அக்கதை விக்ரமிற்கு மிகவும் பிடித்து போனதாக தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bollywood Kangana Ranaut actor vikram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe