style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
நடிகர் விக்ரம் தற்போது கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் 'கடாரம் கொண்டான்' படத்தில் நடித்து வருகிறார். 'தூங்காவனம்' பட இயக்குனர் ராஜேஷ்.எம்.செல்வா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே விக்ரம் மலையாளத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் 'மகாவீர் கர்ணா' படத்தில் அடுத்தாக நடிக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற நிலையில் நடிகர் விக்ரம் இப்படத்தை தொடர்ந்து டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களின் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.