பிரபல மாஸ் இயக்குநருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தரும் விக்ரம்...

மஹாவீர் கர்ணா என்கிற வரலாற்று படத்தில் நடிகர் விக்ரம் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். 300 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகுவதாக சொல்லப்பட்ட இப்படம் தற்போது ட்ராப்பாகி விட்டதாக சொல்லப்படுகிறது.

vikram

அதன் காரணமாக அதற்கு ஒதுக்கப்பட்ட தேதிகளை தற்போது இயக்குநர் லிங்குசாமிக்கு கொடுக்க முடிவு செய்துள்ளாராம் விக்ரம். விஷாலை வைத்து கடைசியாக சண்டக்கோழி 2 என்றொரு படத்தை எடுத்திருந்தார் லிங்குசாமி. இது எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ராகவா லாரன்ஸுடன் இணைந்து தற்போது ஒரு படத்தில் லிங்குசாமி பணி புரிவதாக சொல்லப்படுகிறது.

இந்த சமயத்தில் விக்ரம் கொடுத்துள்ள வாய்ப்பால் மகிழ்ச்சியில் இருக்கிறாராம் லிங்குசாமி. இந்த படத்தினை ஒரு முன்னணி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது. லிங்குசாமி இயக்கத்தில் விக்ரம் இதற்கு முன்னர் பீமா என்றொரு படத்தில் நடித்திருந்தார். இது எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

actor vikram directorlingusamy
இதையும் படியுங்கள்
Subscribe