Advertisment

தியேட்டர் விசிட் அடித்த 'விக்ரம்' படக்குழு ; வைரலாகும் புகைப்படம்

'Vikram' film crew visits theater ; Photo goes viral

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'விக்ரம்'. இப்படத்தில் விஜய் சேதுபதி 'சந்தானம்' என்ற கதாபாத்திரத்திலும், ஃபகத் ஃபாசில் 'அமர்' என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். 'ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்' நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம் இன்று (03.06.2022) பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. நான்கு வருடம் கழித்து கமல் படம் வெளியாகியுள்ளதால் அவரது ரசிகர்கள் திரையரங்கு முன்பு கட்டவுட் மற்றும் பேனர்கள் வைத்து கொண்டாடி வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் 'விக்ரம்' படக்குழு ரசிகர்களுடன் படத்தை பார்த்துள்ளனர். இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அனிருத், நடிகர் நரேன் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் 'விக்ரம்' படத்தை திரையரங்கில் ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்து ரசித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisment

naren anirudh lokesh kanagaraj vikram movie
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe