Advertisment

மகேஷ் பாபு படத்தில் நடிக்கிறாரா விக்ரம்? மேலாளர் சொன்ன தகவல்!

vikram dont play mahesh babu film

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விக்ரம் அஜய் ஞானமுத்து இயக்கும் 'கோப்ரா' படத்திலும், மணிரத்னம் இயக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்திலும் நடித்து முடித்துள்ளார். இதனைத்தொடர்ந்து இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதனிடையே, த்ரிவிக்ரம் இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிக்கும் படத்தில் வில்லனாக நடிகர் விக்ரம் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது.

Advertisment

இந்நிலையில் இதற்கு விக்ரம் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவரது மேலாளர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்," நடிகர் விக்ரம், மகேஷ்பாபு படத்தில் நடிக்க உள்ளதாகப் பரவும் செய்திகள் அனைத்தும் வதந்தியே. ஊடகங்கள் இது போன்ற செய்திகளை வெளியிடும் முன்பு தயவு செய்து எங்களிடம் உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் "எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment

trivikram mahesh babu actor vikram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe