'கோப்ரா' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்?

vikram 'Cobra' release date change?

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கோப்ரா'. இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஜான் விஜய் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் விக்ரம் 7 வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ளார். 'செவன் ஸ்கிரீன்ஸ் ஸ்டுடியோ' தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் 'கோப்ரா' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் வருகிற ஆகஸ்ட் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என சமீபத்தில் படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் தற்போது வெளியாகியிருக்கும் லேட்டஸ்ட் தகவலின் படி இப்படம் வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படத்தின் கிராஃபிக்ஸ் (Vfx) பணிகளுக்கு அதிக நாள் தேவைப்படுவதால் ரிலீஸை தள்ளிவைக்க படக்குழு முடிவுசெய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

actor vikram cobra movie
இதையும் படியுங்கள்
Subscribe