
'மகான்' படத்தை தொடர்ந்து விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கோப்ரா'. அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் கே.ஜி.எஃப் பட நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். இர்ஃபான் பதான், கே.எஸ். ரவிக்குமார், ஜான் விஜய் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் நடிகர் விக்ரம் 7 கெட்டப்பில் நடித்துள்ளார். 'செவன் ஸ்கிரீன்ஸ் ஸ்டுடியோ' தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து தற்போது ரிலீசுக்கான பணிகள் நடந்து கொண்டு வருகிறது.
இந்நிலையில் 'கோப்ரா' படத்தின் 'உயிர் உருகுதே' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த பாடலில், விக்ரம் கதாநாயகியின் மேல் இருக்கும் காதலை விவரிப்பது போல் உள்ளது. மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் குரலில் வெளியாகியுள்ள இப்பாடல் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வருகிற ஆகஸ்ட் 11-ஆம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.