vikram 'cobra' movie audio launch date released ; live performance by ar rahman

'மகான்' படத்தை தொடர்ந்து விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கோப்ரா'. அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். இர்ஃபான் பதான், கே.எஸ். ரவிக்குமார், ஜான் விஜய் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் நடிகர் விக்ரம் 7 கெட்டப்பில் நடித்துள்ளார். 'செவன் ஸ்கிரீன்ஸ் ஸ்டுடியோ' தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வருகிற ஆகஸ்ட் 11-ஆம் வெளியாகவுள்ளது.

Advertisment

இந்நிலையில் 'கோப்ரா' படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி வருகிற 11-ஆம் தேதி சென்னையில் உள்ள பீனிக்ஸ் மாலில் மாலை 7 மணிக்கு இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் விக்ரம், ஏ.ஆர் ரகுமான், உதயநிதி, இர்ஃபான் பதான் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர் ரகுமானின் நேரடி இசையும் இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வீடியோவையும் சமூக வலைத்தளத்தில் படக்குழு வெளியிட்டுள்ளது.

இதனிடையே விக்ரம் நேற்று மார்பில் லேசான அசௌகரியம் ஏற்பட்ட காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விக்ரம் தற்போது நலமுடன் இருக்கிறார். விரைவில் வீடு திரும்பவுள்ளார். வீடு திரும்பிய பின்பு 'கோப்ரா' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment