/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cobra-im.jpg)
'கடாரம் கொண்டான்' படத்தைத் தொடர்ந்து நடிகர்ம் விக்ரம் நடித்து வந்த படம் 'கோப்ரா'. 'டிமாண்டி காலனி', 'இமைக்கா நொடிகள்' உள்ளிட்ட படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக ரஷ்யாவில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, கரோனா தொற்று பரவல்தீவிரமானது. இதனைத்தொடர்ந்து, படப்பிடிப்பைபாதியில்முடித்துக்கொண்டு இந்தியா திரும்பியது கோப்ராபடக்குழு.
இந்தநிலையில், பாதியில் நின்ற'கோப்ரா'படத்தின்படப்பிடிப்பு, இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.இதனைத்தனதுட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ள படத்தின்இயக்குனர் அஜய்ஞானமுத்து, படத்தின் ஷூட்டிங்ஸ்டில்லையும் பகிர்ந்துள்ளார். மேலும், தற்போது படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுவதாகவும், விரைவில் படக்குழு, மீதமுள்ள படப்பிடிப்பை முடிக்க ரஷ்யாசெல்லவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)