Advertisment

"மன்னித்துவிடுங்கள்" - கோப்ரா பட இயக்குநர் ட்வீட்

vikram in cobra - director ajay gnanamuthu tweet about his promotion

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கோப்ரா'. இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஜான் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'செவன் ஸ்கிரீன்ஸ் ஸ்டுடியோ' தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisment

இப்படம் வருகிற 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஆனால் இந்த புரொமோஷனில் இயக்குநர் அஜய் ஞானமுத்து கலந்து கொள்ளவில்லை. இது தொடர்பாக ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பிவந்தனர். இந்நிலையில் இந்த கேள்வி தொடர்பாக அஜய் ஞானமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அந்த பதிவில், "மன்னித்துவிடுங்கள். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெறுவதால் கலந்து கொள்ளமுடியவில்லை. விரைவில் புரொமோஷனில் கலந்துகொள்வேன். ஆனால் என்னுடைய அமேஸிங் டீம் ஸ்ரீநிதி ஷெட்டி, மிர்னாலினி ரவி, உள்ளிட்ட அனைவரும் எங்கள் கிங் கோப்ரா விக்ரம் சாருடன் புரொமோஷனில் ஈடுபடுவதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

vikram movie cobra movie
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe