தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விக்ரமின் மகளுக்கும் மறைந்த திமுக தலைவர் கலைஞரின் பேரன் மனுரஞ்சித்துக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
கரோனா லாக்டவுன் சமயத்தில் விக்ரம் மகள் அக்ஷிதா கர்ப்பமாக இருப்பதாகவும் கரோனா அச்சுறுத்தலால் வீட்டளவில் நெருங்கிய குடும்பத்தினரை சிறிய விழா நடத்தியதாகவும் செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன.
இந்நிலையில் நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதாவுக்கு நேற்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இதன்மூலம் நடிகர் விக்ரம் தாத்தாவாகி உள்ளார். பலரும் விக்ரமிற்கு, அவருடைய குடும்பத்தினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.