
விக்ரம் தற்போது 'கோப்ரா' மற்றும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்துள்ளார். இதில் 'கோப்ரா' படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. 'பொன்னியின் செல்வன்' வருகிற 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து பா.ரஞ்சித்துடன் ஒரு படத்தில் நடிக்கிறார். இதனிடையே விக்ரம் அவரது ரசிகர்கள் மற்றும் சக ஊழியர்களின் சுப வைபவங்களில் கலந்து கொள்வது வழக்கம்.
அந்த வகையில் தனது வீட்டின் பணியாற்றும் ஊழியரின் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். விக்ரமின் வீட்டில் பல ஆண்டுகளாக பணியாற்றி மறைந்தவர் ஒளிமாறன். அவரது மனைவியான மேரி என்பவரும் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவரது வீட்டில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மேரியின் மகன் தீபக், வர்ஷினி என்ற பெண்ணை மணந்துகொண்டார். இவர்களின் திருமணத்தில் விக்ரம் கலந்து கொண்டு வாழ்த்திய புகைப்படங்கள் தற்போது சமூக வளைத்ததில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.