/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mahaan.jpg)
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் படம் 'மகான்'. இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து அவரது மகன் துருவ் விக்ரமும் நடிக்கிறார். மேலும், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது இறுதிக்கட்டப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் 'மகான்' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டைபடக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் 'விக்ரம்' மற்றும் அவரது மகன் த்ருவ்விக்ரம்' இருவரும் 'மகான்' படத்தின் டப்பிங் பணியை முடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. நடிகர் விக்ரம் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கும்'கோப்ரா' படத்திலும், மணிரத்னம் இயக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்திலும்நடித்து வருகிறார். இவ்விருபடங்களையும்நிறைவு செய்த பிறகு நடிகர் விக்ரம் பா.ரஞ்சித்துடன் இணைந்து 'சியான் 61' படத்தில் நடிக்கவுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
#Mahaan Dubbing Done ✔️?#ChiyaanVikram#DhruvVikrampic.twitter.com/sBF1ddhRCW
— karthik subbaraj (@karthiksubbaraj) December 3, 2021
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)