vikram dhruv

விக்ரம் தற்போது 'கோப்ரா' படத்தில் நடித்து வரும் நிலையில், இவர் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

Advertisment

Advertisment

விக்ரமின் 60ஆவது படமாக உருவாகும் இப்படத்தையும், 'கோப்ரா' படத்தைத் தயாரிக்கும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் லலித் குமார், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தில் விக்ரம் மகன் த்ருவ் விக்ரமும் முதன் முறையாக அவருடன் இணைந்து நடிக்கின்றார். 'ஆதித்ய வர்மா' படம் மூலம் கவனிக்கத்தக்க நடிப்பை வெளிப்படுத்தி கவனம் ஈர்த்த த்ருவ் விக்ரம் இந்தப் படத்தில் பவர்ஃபுல்லான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஒரு வாரமாக சமூக வலைதளங்களில், இந்த படத்தின் தகவல்கள்வைரலாக பரவி வந்தது. மேலும், இந்த படத்தில், பேட்ட படத்தை தொடர்ந்து கார்த்திக்கின் இயக்கத்தில் அனிருத் இரண்டாவது முறையாக இசையமைப்பாளராக பணிபுரிகிறார்.