நடிகர் விக்ரம், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்', அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் 'கோப்ரா' படத்தில் கவனம் செலுத்திவருகிறார். இப்படங்களையடுத்து, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ளார். இப்படத்தில், அவருடன் இணைந்து த்ருவ் விக்ரமும் நடிக்கிறார். இப்படம் குறித்த அப்டேட் சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது.
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பானது மார்ச் மாதத்தில் தொடங்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.தற்காலிகமாக, 'விக்ரம் 60' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இசையமைப்பாளர் குறித்த அப்டேட்டை மட்டுமே இதுவரை படக்குழு வெளியிட்டுள்ள நிலையில், நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த முழுவிவரங்கள் படக்குழு தரப்பிலிருந்து விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.