/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1622.jpg)
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கோப்ரா'. இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஜான் விஜய் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விக்ரம் 7 வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ள இப்படம் வரும் 31 ஆம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக உள்ளது.
இப்படத்தை தொடர்ந்து விக்ரம் கோப்ரா படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் நடிக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அதுஉறுதியாகியுள்ளது. அண்மையில் ட்விட்டர் ஸ்பேசில் கோப்ரா படக்குழுவினருடன் உரையாடிய விக்ரம் மீண்டும் அஜய் ஞானமுத்து இயக்கத்தில்ஒரு படம் நடிக்கவுள்ளேன்எனக் கூறியுள்ளார்.
விக்ரம் அடுத்ததாக பா.ரஞ்சித் இயக்கும்சியான் 61 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் பணிகளை முடித்த பிறகு விக்ரம் அஜய் ஞானமுத்து இயக்கும்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)