Vikram as Aditya Karikalan ponniyin selvan movie

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் 'பொன்னியின் செல்வன்'. எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் எடுக்கப்படுகிறது. இரு பாகங்களாக உருவாகும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. படப்பிடிப்பு பணிகளைமுடித்துள்ள படக்குழு இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.

Advertisment

இந்நிலையில் பெண்ணின் செல்வன் படக்குழு விக்ரம் கதாபாத்திரத்தின் பெயரை வெளியிட்டுள்ளது. அதில், விக்ரம் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்றும், அதற்கான போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. அத்துடன் அந்த பதிவில் கடுமையான போர் வீரன், காட்டுப்புலி ஆதித்ய கரிகாலன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பைஎகிற வைத்துள்ளது.

Advertisment