vikram

Advertisment

'சாமி' படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் விக்ரம் - ஹரி கூட்டணியில் சாமி 2ஆம் பாகமான 'சாமி ஸ்கொயர்' படம் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ள நிலையில் விக்ரம் தற்போது ராஜேஷ் எம் செல்வா இயக்கும் புதியப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விக்ரம் தற்போது ஒரு விளம்பர படத்திலும் நடித்துவுள்ளார். சி.சி.டிவி கேமராவின் விழிப்புணர்வு சம்மந்தமாக தயாரான இந்த விளம்பர படத்திற்கு 'மூன்றாம் கண்' என்று தலைப்பு வைத்துள்ளனர். ஜே.டி & ஜெர்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த விளம்பரம் வீடுகள், கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இருக்கும் என கூறப்படுகிறது. நடிகர் விக்ரம் ஏற்கனவே ஜே.டி & ஜெர்ரி இயக்கத்தில் உருவான உல்லாசம் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment