மலையாள திரையுலகில் நடிகைகள் பலருக்கு பாலியல் தொல்லைகள் ஏற்படுவதாகஹேமாகமிஷன்சமீபத்தில் அறிக்கைவெளியிட்டது. இந்த அறிக்கை தற்போது திரையுலகில் அதிர்ச்சியைஏற்படுத்தியிருக்கிறது. அதன் பிறகுஸ்ரீலேகாமித்ரா, ரேவதி சம்பத் உள்ளிட்ட பல நடிகைகள் தாமாக முன் வந்து பாலியல் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த புகாரில் மலையாள நடிகர் சங்க நிர்வாகத்தினரும் சிக்கியுள்ளதால்,அதற்குதார்மீக பொறுப்பேற்று சங்கத் தலைவர்மோகன்லால்உட்பட 17 நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளனர்.
அதே சமயத்தில் கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை ஆளாக்கப்பட்டு கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் கைதானரஞ்சய்ராய்என்பவரிடம்சி.பி.ஐ விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. பயிற்சி பெண் மருத்துவர் பணிபுரிந்த மருத்துவமனைஉட்படபல இடங்களில் பல்வேறு அமைப்பினர் மற்றும் மருத்துவர்கள் நீதி கேட்டு போராட்டம் நடத்தினர். மேலும்ரித்திகாசிங், தமன்னா,ஆலியாபட், உள்ளிட்டதிரைப்பிரபலங்களும்தங்களதுகண்டனத்தைப்பதிவு செய்தனர். மேலும் இயக்குநர் மற்றும் நடிகர் அமீர், இந்த சம்பவங்களுக்கு மரண தண்டனை தான் தீர்வு என அவரது கருத்தை முன்வைத்திருந்தார்.
இந்த நிலையில் நடிகர் விக்ரம் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள் குறித்து தனதுகருத்தைத்தெரிவித்துள்ளார்.தங்கலான்படம் வருகிற செப்டம்பர் 6ஆம் தேதி இந்தி மொழியில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின்புரமோஷனுக்காகநேர்காணல் ஒன்றில் பேசிய விக்ரம், “அனைத்து பெண்களும் பாதுகாப்பை உணர வேண்டும். அவர்கள் அதிகாலை 3.00மணிக்குதெருக்களில் நடக்க முடியும்,வீட்டிற்குசெல்ல முடியும், யாரும் எதுவும் செய்ய மாட்டார்கள் என்று உணர வேண்டும். அந்தஅளவிற்குபெண்களுக்கு இந்த சமூகத்தில் பாதுகாப்பான இடத்தை ஆண்கள்ஏற்படுத்தித்தர வேண்டும். பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் அருவருப்பானது” என்றார்.