விக்ரம் கடைசியாக ‘வீர தீர சூரன் பாகம் 2’ படத்தில் நடித்திருந்தார். கடந்த மார்ச் மாதம் வெளியான இப்படம் பெரியளவு வரவேற்பு பெறவில்லை. வெளியான முதல் நாளிலும் படத்தின் முதலீட்டாளர்களுடன் ஏற்பட்ட பிரச்சனையால் முதல் காட்சி அன்று மாலை தான் திரையிடப்பட்டது. 

வீர தீர சூரன் படத்தை அடுத்து மண்டேலா, பட இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். ஷாந்தி டாக்கிஸ் பேனரில் தயாரிப்பாளர் அருண் விஷ்வா இப்படத்தை தயாரிக்க விக்ரமின் 63வது படமாக உருவாகுமென தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு எந்த அப்டேட்டும் வரவில்லை. படப்பிடிப்பு தொடங்கவில்லை. இதனால் இந்தப் படம் டிராப் என சொல்லப்பட்டது. ஆனால் தயாரிப்பாளர் அருண் விஷ்வா, படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் கதைக்கு கொஞ்சம் நேரம் தேவைப்படுவதால் சரியான நேரத்தில் அப்டேட் வரும் என சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கூறியிருந்தார். 

இப்படத்தை அடுத்து 96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ளதாகவும் கதை கேட்டு விக்ரம் ஓ.கே. சொல்லிவுட்டதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் விக்ரம் நடிக்கும் அடுத்தப் பட அறிவிப்பு தற்போது வெளியாகவுள்ளது. அதன்படி ஏற்கனவே தகவல் வெளியானது போல் இப்படத்தை 96, பட இயக்குநர் பிரேம் குமார் தான் இயக்குகிறார். படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 

பிரேம் குமார் கடைசியாக கார்த்தியை வைத்து ‘மெய்யழகன்’ படத்தை இயக்கியிருந்தார். பின்பு 96 பட இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது விக்ரமை இயக்க கமிட்டாகியுள்ளார். அண்மையில் வேல்ஸ் நிறுவனம், அவர்கள் நிறுவனத்தில் படங்கள் பன்னும் இயக்குநர்கள் பட்டியலை வெளியிட்டிருந்தது. அதில் பிரேம் குமாரும் இடம் பெற்றிருந்தார். ஆனால் ஹீரோ குறித்து வெளியிடப்படவில்லை. இதையடுத்து அதன் ஹீரோவை தற்போது வெளியிட்டுள்ளது. விக்ரமின் 63வது பட படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாமலே அடுத்த பட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. முன்னதாக கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment